குஜராத் மாநிலம் நர்மதாவில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 மாணவி பள்ளி வளாகத்திற்குள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நர்மதா மாவட்டத்தில் உள்ள தாடியா படாவில் இச்சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, பள்ளியின் பின்புறம் உள்ள எஸ்டி டிப்போ பகுதி வரை மாணவியை அழைத்துச் சென்ற சிலர் அங்கு வைத்து பாலியல் வன்கொடுமை செயலில் ஈடுபட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வழக்கு குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.