அமெரிக்காவின் நியூயார்க் நகர் அருகே புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் சம்பவத்தன்று காலை 8.30 மணி அளவில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் ? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அதாவது காலை நேரம் என்பதால் புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தவர்கள் உடலில் ரத்த காயங்களுடன் வெளியே செல்வதையும் சக பயணிகள் அவர்களுக்கு உதவி அளித்து வரும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.