உத்திர பிரதேசத்தில் பச்சிளம் குழந்தையை தெரு நாய் கடித்து குதரிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் டெல்லியில் நொய்டா நகரில் செக்டார் நூறு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று கட்டிட வேலை நடைபெற்றுள்ளது. அங்கு கட்டிட தொழிலாளிகளான தம்பதி தங்கள் 7 மாத குழந்தைகளுடன் வேலைக்கு சென்றுள்ளனர். தம்பதி தங்கள் குழந்தையை கட்டிட பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு கட்டிட வேலை செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அந்த குடியிருப்பு பகுதிக்குள் வந்த தெரு நாய் ஒன்று தனியாக இருந்த அந்த 7 மாத கைக்குழந்தையை கடித்து குதறி உள்ளது தெரு நாய் கடித்து குதறியதில் பச்சிளம் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனை அடுத்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட கட்டிட தொழிலாளிகளான பெற்றோர்கள் விரைந்து சென்று பார்த்தபோது குழந்தையை தெரு நாய் கடித்து குதருவதைக் கண்டு அதிர்ச்சடைந்துள்ளார். அதன் பின் தெருநாயிடமிருந்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது ஆனால் தெரு நாய் கடித்து குதறியதில் பலத்த காயமடைந்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.