Categories
தேசிய செய்திகள்

OMG: திருப்பதி பிரசாதம் சாப்பிட்ட பக்தர்… திடீரென போதை மயக்கம்…. பணத்தை சுருட்டிய மோசடி நபர்…. பரபரப்பு…..!!!!

ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் பயணம் மேற்கொண்ட பெண் ஒருவர் அந்த பக்தருக்கு அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து ஸ்ரீகாளகஸ்தியிலுள்ள ஒரு லாஜிக்கு அந்த பக்தரை அழைத்துச்சென்ற பெண் ஏழுமலையான் கோவில் பிரசாதத்தை வழங்கி இருக்கிறார். அதன்பின் பிரசாதம் சாப்பிட்ட சில நிமிடங்களில் அந்த பக்தருக்கு போதை மயக்கம் ஏற்பட்டு உள்ளது.

போதை மயக்கத்திலிருந்த அந்த பக்தரிடம் இருந்து ரூபாய்.6 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் மற்றும் பணம் திருடிக்கொண்டு அப்பெண் காணாமல் சென்றார். போதை மயக்கம் தெளிந்த பின் அந்த பக்தர் தன்னிடமிருந்த நகை மற்றும் பணம் திருடுபோனது அறிந்து போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாட்ஜில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரத்தை வைத்து அந்த இளம்பெண்ணை தேடி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Categories

Tech |