Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: “தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி?”…. ஐதராபாத்தில் முற்றிய சண்டை?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் ஜனவரி 17-ஆம் தேதி விவாகரத்து பெற போவதாக இருவரும் ஒன்றாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகும் இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் உள்ள தனுஷின் பெயரை நீக்கவில்லை. இதனால் மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு மது அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்று தனுஷும், ஐஸ்வர்யாவும் சண்டை போட தொடங்கியதாகவும் அப்போது வாக்குவாதம் தொடர்ந்ததால் உடனே இனி பிரிவது என்று முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு தனுஷ் பிரிவு குறித்து டுவீட் செய்ய ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக தெரிகிறது.

Categories

Tech |