கொரோனா தொற்று காரணமாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் உயிரிழந்து வந்த நிலையில் தற்போது டிக்டாக் பிரபலம் பாஸ்கரன் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக்கில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் பாஸ்கரன். இவருடைய நகைச்சுவையான டிக்டாக் வீடியோக்களை பார்த்து பலரும் இவரை பின்தொடர ஆரம்பித்தனர்.
மேலும் இவர் காதல் பாடல்களுக்கு அதிகமாக ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்ததால் இவரை எல்லோரும் செல்லமாக “Remo பாஸ்கரன் Daddy” என்று அழைத்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாஸ்கரன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த செய்திஅறிந்து பலரும் அவருக்கு இரங்கல் தெரித்து அவரது வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதை அடுத்து பாஸ்கரன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.