Categories
தேசிய செய்திகள்

OMG: ஜனவரி 1 முதல்…. இதெல்லாம் விலை உயர்வு…. வெளியான புதிய தகவல்….!!!!

சரக்கு மற்றும் சேவை வரி ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஜனவரி 1 2022- முதல் ஜவுளி ஆடைகள் மற்றும் காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி 12% உயர்த்தப்படுகிறது.

இதனால் ஆடைகள், செருப்பு /காலணிகள் போர்வைகள், டேபிள் கிளாத், டென்ட் உள்ளிட்டவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5% இருந்து 12% ஆக வரை உயர்வதால் ஆடைகள் 1000 ரூபாய் வரை உயரலாம். அதேபோல் ஊபர், ஓலா போன்ற வாடகை வாகனங்கள் மூலம் புக் செய்தால் பயணக் கட்டணத்தை 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

Categories

Tech |