மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜபல்பூர் என்ற மாவட்டத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் தலை மற்றும் கைப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடல் பாகங்களை மீட்டு பிணவறையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் குழந்தையின் மற்ற உடல் பாகங்களை தேடிக் கொண்டிருப்பதாக நகர காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் தலை மற்றும் கைப்பகுதி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.