தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன . தமிழகத்தை பொருத்தவரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும்,மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவல் வேகம் குறைந்து வருவதாகவும் மத்திய குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.