Categories
அரசியல்

OMG : “கூட்டணி முறிவுக்கு இவர் தான் காரணமா?”…. ஜெயக்குமார் அளித்த விளக்கம்….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-பாஜக இடையே அனைத்து பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பத்தில் சுமூகமாக தான் நடைபெற்றது என்று கூறியுள்ளார். மேலும் அதிமுகவால் பாஜகவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாததால் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

ஆனால் நாங்கள் எங்களுடைய தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு இவ்வாறு செயல்படுகிறோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அதேபோல் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுகவின் கூட்டணியில் நீடிக்குமா ? என்ற கேள்விக்கு ஜெயக்குமார் அதனை தற்போது முடிவெடுக்க முடியாது. அதிமுக தலைமை நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது இது குறித்து முடிவெடுக்கும் என்று பதிலளித்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக குறித்து தெரிவித்த கருத்துக்கு அவரே வருத்தம் தெரிவித்துள்ளார். இதற்கு தகுந்த பதில்களும், கண்டனமும் அதிமுகவிலிருந்து கொடுக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார். அதாவது பாஜக துணைத் தலைவரும் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் அண்மையில் “தமிழக சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏ ஒருவர் கூட ஆண்மையோடு பேசுவதில்லை.

வருங்காலத்தில் பாஜக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி கட்சி அமையும்” என்று கூறினார். இது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி முறிவிற்கு நயினார் நாகேந்திரனின் பேச்சு தான் காரணம் என்பது போல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |