Categories
மதுரை மாவட்ட செய்திகள்

OMG!…. குழந்தை மீது ஏறி இறங்கிய வேன்…. பெருசோக சம்பவம்….!!!!

மதுரை மாவட்ட பரவை பகுதிக்கு அருகில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி ரேவதி இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் 3 வயதில் பொன்ராம் என்ற குழந்தை உள்ளது. தந்தை செந்தில்குமார் வேலைக்குச் சென்ற நிலையில் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பெண் ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்ல தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் அந்த வழியாக வந்தது.

அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருப்பது தெரியாமல் வேன் ஓட்டுனர் குழந்தையின் மீது வண்டியை விட்டுவிட்டார். அக்கம் பக்கத்தினரின் அலற சத்தம் கேட்டு வேன் ஓட்டுநர் வண்டியை நிறுத்தி பார்த்தபோது குழந்தையின் தலைப்பகுதியில் வாகனம் சக்கரம் ஏறி இறங்கி குழந்தை பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தது. மேலும் குழந்தையின் உடலை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேனை கவன குறைவாக ஓடிச் சென்ற சேக் அப்துல்லா என்ற ஓட்டுநரை சமயநல்லூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |