Categories
தேசிய செய்திகள்

OMG: கிணறுகளில் உள்ள தண்ணீரில் தீப்பிழம்பு…. என்ன காரணமா இருக்கும்?…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…..!!!!!

பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி மற்றும் கூட்டநாடு பகுதியிலுள்ள கிணறுகளில் உள்ள தண்ணீரில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கும், தீயணைப்புதுறை மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிணறுகளில் இந்த மாதிரி தீப்பிழம்புகள் காணப்பட்டு வருகிறது. தற்போது அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஒரு சில கிணறுகளில் பெட்ரோல் வாசம் அடிக்கிறது. மேலும் ஒரு சில கிணறுகளில் மினரல் வாட்டரின் அம்சம் இருக்கிறது என கூறப்படுகிறது.
அதே சமயம் அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருந்து கிணறுகளில் பெட்ரோல் கலந்து இருக்கலாம் என்றும் அதன் வாயிலாகவும் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். வெயிலால் ஏற்பட்ட சூட்டின் விளைவாய் தீ பிடித்து இருக்குமோ என்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது இதுவரையிலும் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கிணற்றில் தீ எறிவதை பார்க்க பெரும்பாலான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

Categories

Tech |