Categories
மாநில செய்திகள்

OMG: கருக்கலைப்பு மாத்திரையால் …. கர்ப்பிணி உயிரிழப்பு….வெளியான அதிரடி உத்தரவு…!!!

 கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொசவம்பாளையத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ரம்யா (29). அவரது கணவர் பிரகாஷ். கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி அன்று கர்ப்பிணியாக இருந்த ரம்யா, உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இத்தகவல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் கவனத்துக்கு சென்றுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர்.வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்ட குழு அமைத்து ஆட்சியர் உத்தர விட்டுள்ளார்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட குழுவினர், உயிரிழந்த கர்ப்பிணி பெண் வசித்து வந்த பகுதியில் உள்ள மருதம் என்ற மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை, மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமலேயே வாங்கி சாப்பிட்டதாக தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருந்தகத்தில் ஆய்வு செய்தபோது அந்த மருந்தகம் அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மருந்தகம் உரிமையாளரை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் கடந்த மார்ச் 31ம் தேதி மருதம் மருந்தகம் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர், இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது,  கொரோனா பாதிப்பு காலத்தில் இருந்து தற்போது வரை தாய்மார்கள் கருக்கலைப்பு செய்யும் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகள் ,பயிற்சி பெறாத மருத்துவர், மற்றும் மருந்தகங்களில் (மெடிக்கல் ஷாப்) கருக்கலைப்பு  மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் மற்றும் மரணம் ஏற்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேவையற்ற மற்றும் வேண்டத்தகாத கர்ப்பங்களை பாதுகாப்பான முறையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கருக்கலைப்பு சிகிச்சை செய்து கொள்ளலாம். எனவே, தேவையற்ற கர்ப்பத்தை, கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்பும் கர்ப்பிணித் தாய்மார்கள், பயிற்சி பெறாத மருத்துவர்களிடமோ, அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகளிலோ கருக்கலைப்பை மேற்கொள்ள வேண்டாம். மேலும் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாத மருந்து, மாத்திரைகளை விற்பவர்கள் மீதும் மற்றும் போலி மருத்துவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |