Categories
சினிமா

OMG….! கடைசியில இப்படி சொல்லிட்டாங்களே…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

ராதே ஷ்யாம் படத்தின் ரிலீசை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த இப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படுவதாக இருந்தது. சுமார் 350 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையிடப்படுவதாக இருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த சமயத்தில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டால் போதுமான லாபம் கிடைக்காது என ஆர் ஆர் ஆர் திரைப்பட ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு ராதேஷ்யாம் திரைப்படமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Categories

Tech |