Categories
உலக செய்திகள்

OMG: உலகில் 2 வினாடிகளுக்கு 1 இறப்பு?…. WHO வெளியிட்ட ஷாக் நியூஸ்…..!!!!

மருத்துவம், சுகாதாரம் ஆகியவை சார்ந்த பல புள்ளிவிபரங்களை உலகசுகாதார நிறுவனமானது(WHO) அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி தொற்றா நோய்கள் ஆன இதயபாதிப்பு, புற்று நோய், நுரையீறல் பாதிப்பு போன்றவை காரணமாக உலகில் 2 வினாடிகளுக்கு ஒருவர் இறப்பதாக WHO தெரிவித்து உள்ளது. இந்த இறப்புகளில் 10-ல் 9 வருவாய் குறைந்த (அல்லது) மத்திய தர வருவாய் கொண்ட நாடுகளில் தான் நிகழ்கிறது.

இத்தகைய நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுத்துக் கொள்ளவோ, வந்தால் உரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளவோ, இது போன்ற நோய்கள் வருவதை முடிந்தவரை தள்ளிப்போடுவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவோ போதிய வருவாய் இல்லாததே இதற்குக் காரணம். வருடந்தோறும் 70 வயதுக்குட்பட்டவர்களில் 1 கோடியே 70 லட்சம் பேர் இந்த நோய்கள் காரணமாக இறப்பதாக தெரிவித்துள்ள WHO, உயிரிழப்பவர்களில் 86 % பேர் குறைந்த வருவாய் (அல்லது) நடுத்தர வருவாய் உள்ள நாடுகளைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என கூறியுள்ளது.

Categories

Tech |