தென்ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் இரவு விடுதி ஒன்று இருக்கிறது. இந்த இரவு நேர விடுதிக்கு நேற்றிரவு பள்ளிச்சிறுவர்கள் சில பேர் வந்துள்ளனர். ஏனெனில் பள்ளி தேர்வு முடிந்ததை கொண்டாடும் வகையில் அவர்கள் இரவு விடுதிக்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் இரவு விடுதியில் மது குடித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் விடுதிக்கு வந்த சிறுவர்கள் 21 பேர் மர்ம முறையில் இறந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்தவர்களின் வயது 13 -17 வரை ஆகும். இதனால் சிறுவர்கள் குடிந்த மதுவில் விஷம் எதுவும் கலந்து கொடுக்கப்பட்டதா..? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.