Categories
மாநில செய்திகள்

OMG! இரவு முழுவதும் கண்ணீருடன் துடித்த ஸ்டாலின்…. நடு ராத்திரியில் மீண்டும்….!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் நேற்று காலமானார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவினை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளனர். கலைஞர் கருணாநிதியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவருடைய உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு முறை அஞ்சலி செலுத்தியிருக்கிறார். நேற்று மாலை அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற பின்னர் தூக்கம் வராமல் துக்கத்தில் துடித்த முதல்வர் நடு இரவில் மீண்டும் சண்முகநாதனுக்கு அஞ்சலி செலுத்தி, அங்கு சற்று நேரம் இருந்திருக்கிறார். மேலும் சண்முகநாதன் இறுதி ஊர்வலத்திலும் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

Categories

Tech |