சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய கின்னஸ் ரெக்கார்ட் செய்த நபர்களை பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம். இதில் மூன்றாவது இடத்தில் இருப்பது செயின் ஹல்க் கிரீன். இந்த ஒரு மனிதர் ஜக்லின் செய்வதை ஒரு கின்னஸ் ரெக்கார்டு செய்து காட்டியுள்ளார். இதில் இருக்கக்கூடிய ஆபத்து என்னவென்றால் ஓடிக்கொண்டு இருக்கக்கூடிய ட்ரில்லிங் மிஷின் உடன் மூன்று பொருட்களை வைத்து ஜக்லின் செய்துள்ளார். இதில் இரண்டாவது இடத்தில் உள்ளது 1974ஆம் ஆண்டு பிரான்சை சேர்ந்த பிலிப் பெட்டிட் என்ற மனிதர் நியூயார்க்கின் தரையிலிருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கக்கூடிய டிவின் டவர்ஸ் நடுவில் ஒரு கயிறு கட்டி அதன் மீது நடந்துள்ளார். அதுவும் எந்த ஒரு பாதுகாப்பு சாதனமும் இல்லாமல் இதை செய்து காட்டியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கையை ஒரு பாடமாகவே எடுத்து வெளியிட்டனர். நம்பர் ஒன் வேர்ல்டு ரெக்கார்டு என்னவென்றால் இந்தியாவை சேர்ந்த கரன்ஜித் மற்றும் கண்ஜித்சிங் என்பவர் அவர்களில் ஒருவரை தரையில் படுக்க வைத்து அவரை சுற்றி தேங்காய் மற்றும் தர்பூசணி பழங்களை வைத்து விட்டு மற்றொருவர் கண்ணை மூடிக்கொண்டு மிகப்பெரிய சுத்தியலால் அந்த தேங்காயை உடைக்கிறார். கண்ணை கட்டி இருக்கும் நபர் தவறுதலாக வேறு இடத்தில் உடைத்து இருந்தால் அவரது கை, கால்கள், மண்டை என்று ஏதாவது உடைந்து உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.