ஜப்பானில் 2011 ஆம் வருடம் ஏற்பட்ட சுனாமியால் onagawa என்ற பகுதி மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமியால் சுமார் அரை மில்லியன் மக்கள் குடி இழப்பை இழந்து தவித்து வந்தது மட்டுமல்லாமல் 20,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த பகுதியில் தான் yasuo takamatsu தன்னுடைய மனைவியை சுனாமிக்கு தொலைத்துள்ளார். மேலும் 2500 பேர்கள் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மாயமானவர்கள் பட்டியல் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் yasuo தனது மனைவியை கடந்த 11 வருடங்களாக தொடர்ந்து தேடி வருகின்றார்.
இவர் 2013 ஆம் வருடத்தில் ஆழ்கடலில் மூழ்கி தேடுதலை தொடர்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவரது மனைவியின் மொபைல் போன் அவர் பணியாற்றிய கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு பின் அவரது மொபைல் போன் மீட்கப்பட்டதை தொடர்ந்து தனது தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளார். கடலின் போக்கு காரணமாக அவரது உடலை தான் மீட்காமல் போகலாம் ஆனால் தேடுவதை மட்டும் நிறுத்தப் போவதில்லை எனது தெரிவித்துள்ளார். சுனாமியின் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாமியாரை கவனித்து வந்துள்ளார் yasuo.
இந்த நிலையில் சுனாமி எச்சரிக்கையை அடுத்து மக்கள் அனைவரும் மருத்துவமனையில் திரண்டு உள்ளனர். ஆனால் yausoவின் மனைவி வங்கியில் பணியில் ஈடுபட்டிருந்ததால் அவரால் உரிய நேரத்தில் வெளியேற முடியாமல் போனது இதன்பின் வங்கி ஊழியர்கள் அனைவரும் மற்றும் yasuo வின் மனைவி போன்றோர் சுனாமியால் அடித்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. Tohoku சுனாமிக்கு முன்னர் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்குமானது 9.1 ரிக்ட்டர் அளவில் பதிவாகியுள்ளது மனிதகுல வரலாற்றில் மிக மோசமான நாலாவது பேரிடர் இது என கூறுகின்றனர்.