இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கில் தொடங்கி, சிம்கார்டு வாங்குவது முதல் குழந்தை பிறப்பு, முதல் இறப்பு சான்றிதழ் வரையில் அனைத்து முக்கிய சேவைகளிலும் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும். அந்த அளவுக்கு இந்தியாவில் ஒரு முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு மாறியுள்ளது. அதேபோன்று பணபரிவர்த்தனை மற்றும் வருமான வரி தாக்கல் தொடர்பான வேலைகளுக்கு பான் கார்டு மிகவும் அவசியமானதாகும். அதனால் அனைவரும் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்க வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
ஆதார்- பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதிக்குள் ஆதார்- பான் கார்டுகளை இணைக்காவிட்டால் தாமத கட்டணம் 1,000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். மார்ச் 31-ம் தேதிக்கு பின் பான் கார்டுகளை பயன்படுத்த முடியாது எனவும் அரசு அறிவித்துள்ளது. அதாவது மார்ச் 31- ஆம் தேதிக்கு பின்னர் பான் கார்டுகள் செயலற்றதாகிவிடும். வருமான வரி சட்டம் பிரிவு 272 பி கீழ் செயலற்ற பான் கார்டுகள் வைத்திருந்தால் 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் பான் கார்டு இணைக்காவிட்டால் என்ன நடக்கும் என்றால்,
தாமத கட்டணமாக 1,000 ரூபாய் வசூலிக்கப்படும்.
பான் கார்டு செயலற்றுப் போகும்.
பான் கார்டுதாரரால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.
மார்ச் 31-ஆம் தேதிக்கு பின் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய முடியாது.
புதிய வங்கி கணக்கு தொடங்க முடியாது.
அதனால் மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனைவரும் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்க வேண்டும்.