Categories
சினிமா

OMG: அடுத்தடுத்து வந்த மாரடைப்பு…. 24 வயதிலேயே பெங்காலி நடிகை இறப்பு…. பெரும் சோகம்….!!!!

மேற்கு வங்காளத்திலுள்ள பெர்ஹாம்பூரில் பிறந்தவர் பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா(24). இவர் சென்ற சில வாரங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. சென்ற நவ..1ஆம் தேதி ஜந்த்ரிலா சர்மாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதாவது அவரது மண்டை ஓட்டுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின் அவருக்கு அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் நினைவு திரும்பாமலே இருந்த சூழ்நிலையில் நேற்று (நவ.,20) அவர் உயிரிழந்தார்.  தொடக்கத்தில் தொலைக்காட்சியில் அறிமுகமாகிய ஜந்த்ரிலா சர்மா, தொடர்ந்து மகாபீத் தாராபீத், ஜிபோன் ஜோதி மற்றும் ஜியோன் கதி போன்ற நிகழ்ச்சிகளில் நடித்தார். இது தவிர்த்து அமி திதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே ஆகிய திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

Categories

Tech |