கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி தொடங்க உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்ததால் ஓராண்டிற்கு ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜப்பானின் வட கிழக்கு நகரமான புகுஷிமாவில் ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது.
அதன்பின் 2011 ஆம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி மகுடம் சூடிய போது, அந்த அணிக்கு பயிற்சி அளித்த நோரியோ சசாகி முதல் நபராக தீபத்தை ஏந்தி செல்கின்றார். அந்த ஒலிம்பிக் தீபத்துடன் முதல் நாளில் 15 பேர் ஓட உள்ளனர். ஜப்பான் முழுவதும் 47 மாகாணங்களுக்கு மொத்தம் 127 நாட்கள் இந்த தீபம் பயணம்செய்கின்றது.
இதைத்தொடர்ந்து 10,000 பேர் தொடர் ஓட்டமாக எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த ஒலிம்பிக் தீப ஓட்டம் வழக்கமாக பெரும் ஆரவாரத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்று வரும். ஆனால் கொரோனா பரவல் குறையாத காரணத்தால் குறைந்த மக்கள் மட்டுமே தொடர் ஓட்ட நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கப்படுகின்றன.அதிலும் அவர்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வுடன் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.