Categories
உலக செய்திகள்

“என்னை என் நாட்டுக்கு அனுப்பாதீங்க”… கண்ணீருடன் கதறிய தடகள வீராங்கனை… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த தடகள வீராங்கனை “என்னை என் நாட்டுக்கு அனுப்பாதீர்கள்” என்று கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த தடகள வீராங்கனையான Kryststina Tsimanouskaya ( 24 ) 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக காத்திருந்த வேளையில் அவரது பயிற்சியாளர் அவரை திடீரென 4×400 ரிலே ஓட தயாராகுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் Kryststina-வின் பயிற்சியாளர் 200 மீட்டர் பந்தயத்திலிருந்து வெளியேற மறுத்தால் தேசிய அணியிலிருந்து வெளியேற்றப்படுவதோடு, வேலையும் பறிபோகும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாகவே Kryststina 4×400 ரிலே ஒப்புக்கொண்டார். இந்நிலையில் Kryststina-வின் பயிற்சியாளர் திடீரென நாட்டுக்கு திரும்ப தயாராகுமாறும் இது உயர்மட்ட உத்தரவு விளையாட்டுத்துறையின் உத்தரவு அல்ல என்று அவரிடம் கூறியுள்ளார். அதாவது பெலாரஸ் நாட்டின் அதிபரான Alexander Lukashenko தடகள வீராங்கனையான Kryststina-வை குறிவைத்து அவரை நாட்டுக்கு கடத்தி வர திட்டமிட்டுள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

எனவே Kryststina நாட்டுக்கு திரும்பிச் சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று ஜப்பான் விமான நிலையத்தில் உள்ள காவல்துறையினரிடம் உதவி கேட்டுள்ளார். மேலும் Kryststina கண்ணீருடன் ஜப்பான் காவல்துறையினரிடம் தன்னை பெலாரஸுக்கு அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சியுள்ளார். இதையடுத்து அந்த காவல்துறையினர் அவரை தங்களது பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மேலும் Kryststina ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து நாட்டில் புகலிடம் கோரவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |