Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக், விம்பிள்டன் போட்டியில் இருந்து….. ரபேல் நடால் விலகல்…!!!

டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் விம்பிள்டன் ஓபன் தொடரிலிருந்து  ரபேல் நடால் விலகியுள்ளார் .

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் 13 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில்  அரை இறுதி போட்டியில் ஜோகோவிச், ரபேல் நடாலை தோற்கடித்தார். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் ரபேல் நடால் 14 வது சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற 28ஆம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதன்பிறகு இரண்டு வார இடைவெளியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் விம்பிள்டன் மற்றும்  ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை  என்று  ரபேல் நடால் தெரிவித்தார் . இதுகுறித்து அவர் கூறும்போது, வில்லிங்டன் ஓபன் டென்னிஸ் தொடங்க 2 வார இடைவெளி மட்டுமே இருப்பதால் பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் செம்மண் தரையில் விளையாடிய பின் உடனடியாக புல் தனக்கு ஏற்றவாறு தன்னுடலை மாற்றுவது எளிதான விஷயம் அல்ல என்று அவர் கூறினார்.

Categories

Tech |