Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை: கால்இறுதி சுற்றில் …. இந்திய ஆண்கள் அணி தோல்வி….!!!

ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டியின் கால்இறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி தோல்வியடைந்தது.

டோக்கியோ  ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது. இதில்  இந்தியா சார்பில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ் மற்றும் தரூன்தீப் ராய் ஆகியோர் கஜகஸ்தான் அணியை எதிர் கொண்டனர். இப்போட்டியில் 6-2 என்ற கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்திய  இந்திய அணி கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதையடுத்து நடந்த கால்இறுதி சுற்றில் இந்திய அணி, தென் கொரிய அணியுடன் மோதியது. இதில் பலம் வாய்ந்த தென்கொரிய அணிக்கு இணையாக இந்திய வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது.

Categories

Tech |