Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வட்டு எறிதல் : இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்வாரா கமல்பிரீத் கவூர்…? ரசிகர்கள் எதிர்பார்ப்பு ….!!!

ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவூர் பதக்கம் வெல்வாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் .

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை  கமல்பிரீத் கவூர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதற்குமுன் நடைபெற்ற தகுதிச்சுற்றில் 64 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்ததால் ,அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதனால் இன்றைய போட்டியில் 32-வது இடத்தில் இருக்கும் கமல்பிரீத் கவூர் வெற்றி பெற்று இந்தியாவுக்கு 4-வது பதக்கம்  வெல்வாரா ,என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 3  பதக்கங்களை பெற்றுள்ளது.

பளுதூக்கும் போட்டியில் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும் ,குத்துச்சண்டையில்  வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் . இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை                 பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இதனால் இன்று நடைபெறும் வட்டு எறிதல் போட்டியில் கமல்பிரீத் கவூர் பதக்கத்தை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது .இந்த போட்டி இன்று மாலை 4.30  மணிக்கு நடைபெறுகிறது.

Categories

Tech |