மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்தனர் .
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 10 ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர் கலந்துகொண்டனர் . 6 சுற்றுகள் கொண்ட போட்டியில் யஷாஸ்வினி முறையே 94,98,94,97,96 என மொத்தமாக 574 புள்ளிகளை பெற்று 13-வது இடத்தை பிடித்தார். இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
இதனால் 13-வது இடத்தை பிடித்த யஷாஸ்வினி தேஸ்வால் இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டார். இதேபோல வீராங்கனை மானு பாகெர் தகுதிச்சுற்றில் முறையே 98,95,94,95,98,95 என மொத்தமாக 575 புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் 12-வது இடத்தை பிடித்தார் இதனால் இவரும் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து ஏமாற்றம் அளித்தார். இந்தப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்ததால் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.