Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : வீரர்கள் தங்கும் கிராமத்தில் …. ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ….!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் தங்கி இருந்த கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது  .

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டி தொடங்க இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் போட்டியில் பங்கு பெறும் வீரர் ,வீராங்கனைகள் தங்கி இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை ஒலிம்பிக் கமிட்டி சங்க செய்தி தொடர்பாளரான மசாத்  தகாயா தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவரின்  பெயர் ,விவரம் பற்றி குறிப்பிடவில்லை. இதனால் தற்போது கிராமத்தில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதற்கு முன்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் 8 ஊழியர்களுக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்று பரவல்  காரணமாக முன்னணி டென்னிஸ் வீரர்களான  ரபேல் நடால், பெடரர் ஆகியோர் விலகிய உள்ளனர் . மேலும் இந்த  ஒலிம்பிக் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

Categories

Tech |