Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ஒழுங்குமுறை விற்பனை கூடம்” 5 லட்சத்துக்கு விற்பனை…. அதிகாரியின் தகவல்….!!

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது. அப்போது திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொண்டு 17 ஆயிரத்து 203 கிலோ மக்காச்சோளத்தை கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து மக்காசோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதில் அதிகபட்சமாக 2,125 ரூபாயும், குறைந்தபட்சமாக 2,110 ரூபாயும் மக்காச்சோளம் விற்பனைக்கு போனது. இதனால் மொத்தமாக 3 லட்சத்து 63 ஆயிரத்து 407-ரூபாக்கு மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏலத்திற்கான முழு ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் அருள்குமார் செய்து வைத்திருந்தார்.

Categories

Tech |