வேதாரண்யம் கடல் பகுதியில் 50 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி அமையும் டால்ஃபினும் இறந்து கரை ஒதுங்கியது.
வேதாரண்யத்தில் கோடியக்கரை தொடங்கி புஷ்பவனம் கடற்கரை பகுதி வரை பசுபிக் பெருங் கடலில் வாழும் அரிய வகை உயிரினமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் பருவகாலங்களில் இனப்பெருக்கத்திற்காக 2000 கிலோ மீட்டர் நீரோட்டத்திற்கு தகுந்தவாறு பயணம் செய்து இந்த பகுதிக்கு வந்து மேடான பகுதியில் மணலை தோண்டி 25 முட்டைகள் வரை இட்டுச்செல்லும்.
சமூக விரோதிகள் இந்த முட்டைகளை எடுத்துச் செல்லாமல் வனத்துறையினர் கோடியக்கரை ஆறுகாட்டுத்துறை ஆமை குஞ்சு பொரிபகத்தில் வைத்து விடுவர்.
இதனையடுத்து குஞ்சுகள் பொரித்த பின்னர் 15 நாட்கள் நன்கு வளர்ந்ததும் கடலில் கொண்டு சென்று வனத்துறையினரால் விடப்படும். இந்த நிலையில் வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் 50 கிலோ எடையுள்ள ஆமையும் டால்பினும் இறந்து கடல் ஒதுங்கியது. இதனை அறிந்த நாகை மாவட்ட வனத்துறையினர் கால்நடை மருத்துவருடன் அப்பகுதிக்கு சென்று ஆலிவர் ரெட்லி ஆமையையும் டால்பினையும் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்து பின்னர் புதைத்துள்ளனர். கடலில் வாழும் உயிரினங்கள் இயற்கை சீற்றத்தால் அல்லது கப்பல் மற்றும் படகுகளின் விசிறியில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்குவது வழக்கமான ஒன்று தான்.