அமெரிக்க நாட்டில் ஹோவர்ட் டக்கர் என்பவர் உலகிலேயே அதிக வயது கொண்ட மருத்துவராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
அமெரிக்க நாட்டின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் க்ளீவ்லேண்ட் என்ற நகரில் வசிக்கும் ஹோவர்ட் டக்கர் என்ற மருத்துவர் 75 வருடங்களாக மருத்துவராக இருக்கிறார். காலையில் 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அவர் கொரோனா தொற்று காலகட்டத்திலும் கூட காணொளி வாயிலாக மருத்துவ சேவையை தொடர்ந்து கொண்டிருந்தார்.
ஓய்வு என்பது நீளமான ஆயுளுக்கான எதிரி என்று கூறும் இந்த மருத்துவர், தற்போது 100 வயதை கடந்து, அதிக வயதுகொண்ட மருத்துவராக உலக சாதனை படைத்திருக்கிறார். எனினும், இப்போது மருத்துவ துறையில் இருந்து ஓய்வு பெறக்கூடிய எண்ணமே கிடையாது என்று கூறியிருக்கிறார்.