4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக முதியவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 4 வயது பெண் குழந்தை வசித்து வருகின்றாள். கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டிற்கு அருகில் இருக்கும் விளையாட்டு திடலில் நின்று கொண்டிருந்த இந்த பெண் குழந்தைக்கு ராமச்சந்திரன் என்ற முதியவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த குழந்தையின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமசந்திரனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் ராமச்சந்திரனுக்கு 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.