Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கவனிப்பதற்கு யாரும் இல்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள துரைசாமிபுரம் பகுதியில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டு காலமாக பால்சாமி சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் பால்சாமியை கவனிப்பதற்கு யாரும் இல்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பால்சாமி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பால்சாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |