வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கருவேப்பம்பூண்டி கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உத்திரமேரூர் சென்று வருவதாக கூறிவிட்டு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் உத்திரமேரூர்-காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் முதியவரின் மீது மோதி விட்டது.
இச்சம்பவத்தை பார்த்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் அந்த முதியவரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தரமேரூரில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.