Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆபாசமாக பேசிய முதியவர்…. திடீரென செய்த செயல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

முதியவர் ஒரு ஹோட்டல் முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா காந்தி சாலையில் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் குடி போதையில் ஒரு ஹோட்டல் முன்பு நின்று கொண்டு ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். இந்நிலையில் தான் அணிந்திருந்த கைலியை கழட்டிய முதியவர், அந்த ஹோட்டலில் முன்பு உள்ள கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக போலீசாரிடம் தகவல் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பண்ருட்டி போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அந்த முதியவர் ஏரிபாளையம் பகுதியில் வசித்து வரும் சதாசிவம் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இவர் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து முதியவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |