லண்டனில் இறுதி சடங்கு மையத்தில் இருந்த வயதான நபரின் உடல் அழகி போன நிலையில் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
Brixton என்ற பகுதியில் வசித்த ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த Uriah Pryce வயது முதிர்வால் உயிரிழந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவரின் உடல் ஒரு இறுதிச் சடங்கு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில், முதியவரின் குடும்பத்தினருக்கு இறுதி சடங்கு மையம் ஒரு தகவலை வெளியிட்டது.
அதில், இனிமேல் Uriah Pryce-ன் உடலை பார்க்க இயலாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அதாவது ஜூலை மாதம் 29ஆம் தேதி அன்று அந்த இறுதி சடங்கு மையத்தை சேர்ந்த பணியாளர்கள் மையத்தை அடைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அந்த மையத்திற்கு யாரும் செல்லாமல் இருந்திருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை காலையில், சென்றபோது தான் குளிர்பதனப் பெட்டியில் மின்சார தடை ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதனால் அந்த பெட்டியில் இருந்த ஏழு சடலங்களும் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றது.
எனவே, அவற்றை பதப்படுத்த மற்றும் இறுதிச்சடங்கு செய்ய இயலாது. முதியவரின் பேரனான Zayed Martin, தன் தாத்தாவை நன்றாக கவனித்துக்கொண்டார். எனவே, அவர் இறந்த பிறகு, இறுதிச்சடங்கை நல்ல முறையில் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனிடையே நடந்த தவறுக்காக அந்த இறுதிச்சடங்கு மையம் மன்னிப்பு கேட்டிருக்கிறது. மேலும், இறுதிச்சடங்கை இலவசமாக செய்து தருகிறோம் என்று தெரிவித்திருக்கிறது.