அம்பத்தூரில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரவு காவலாளியை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பட்ரவாக்கத்தை சேர்ந்த இரவு காவலாளி ஒருவர் பிப்ரவரி 4ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், சிறுமிக்கு பட்ரவாக்கம் பகுதியைச் சேர்ந்த இரவு காவலாளி தேவேந்திரன்(67) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தேவேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.