Categories
உலக செய்திகள்

 99 வயதில்….. யாரும் முறியடிக்க முடியாத 2 கின்னஸ் சாதனை….. மூதாட்டிக்கு குவியும் பாராட்டு….!!

அமெரிக்காவில் 99 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 99 வயது வயது மதிக்கத்தக்க மூதாட்டியான ரூபினா என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முன்சிபல் விமான நிலையத்தில் நெக்ஸ்ட் ஜன் பிளைட் அகாடமியில் விமானம் பறப்பது தொடர்பாகவும், அதை இயக்குவது தொடர்பாகவும் பாடத்தை விளக்கி மாணவர்களுக்கு கூறினார்.

இதை தொடர்ந்து அவர் விமானத்தை இயக்கி வானில் பறந்தும் அங்குள்ளவர்களுக்கு காட்சியளித்தார். உலகிலேயே 99 வயதில் விமானத்தை இயக்கியவர், விமானம் இயக்குவது குறித்து பாடம் எடுத்தவர் ஆகிய அசாத்திய செயல்களை செய்து 2 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.

 

Categories

Tech |