பிரான்சில் மூதாட்டி ஒருவர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து தன் ஆடைகள் அனைத்தையும் களைத்து நிர்வாணமாக நின்ற சம்பவம் அங்கிருந்த காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சுமார் 73 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் பிரான்ஸ் நாட்டின் உள்ள பாதுகலே என்னும் மாவட்டத்தின் அரசு நகரில் இருக்கும் காவல் நிலையத்திற்குள் கடந்த 16-ஆம் தேதி தன்னை கைது செய்யும்படி காவல்துறையினரிடம் கூறி நுழைந்துள்ளார். அதற்கு அங்கிருந்த காவலர்கள் நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று கேட்க, அவர் தவறு ஒன்றும் செய்யவில்லை சிறை அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பது தெரிந்து கொள்வதற்காக என்று கூறியுள்ளார்.
அதற்கு அங்கிருந்த காவல்துறையினர் சரியான காரணம் இல்லாமல் யாரையும் கைது செய்ய இயலாது என்று கூற அந்தப் மூதாட்டி அணிந்திருந்த ஆடைகளை களைத்து நிர்வாணமாக நின்றதோடு காவல்துறையினரின் துப்பாக்கியையும் பறிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்ததோடு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.