கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் பகுதியில் 60 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திடீரென அங்கிருந்து காணாமல் போய்விட்டார். அந்த மூதாட்டி எங்கே சென்றிருப்பார் என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இதுகுறித்து தர்மபுரி டவுன் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மூதாட்டியை தேடி வருகின்றனர்.