பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பிரிட்டன் தம்பதி, நண்பர்களை விருந்துக்கு அழைத்த நிலையில் நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த David மற்றும் Diana Shamash என்ற தம்பதி விடுமுறைக்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்று Herault-ல் இருக்கும் தங்கள் குடியிருப்பில் தங்கியிருந்துள்ளனர். கோடீஸ்வரர்களான இவர்கள், பக்கத்து வீடுகளில் வசிக்கும் நண்பர்களை இரவு நேரத்தில் விருந்திற்கு அழைத்திருக்கிறார்கள்.
அதன்படி, இரவு நேரத்தில் தம்பதியரின் வீட்டிற்கு சென்றவர்கள் வெளியில் நின்று கொண்டு அவர்களை அழைத்துள்ளனர். வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் வீட்டிற்குள் சென்று தேடி இருக்கிறார்கள். அப்போது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் நீச்சல் குளத்தில் இருவரும் இறந்து கிடந்தனர்.
இதனால் அதிர்ந்துபோனவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதாவது கடும் வெப்பநிலை இருந்ததால், நீச்சல் குளத்தில் சிறிது நேரம் செலவிட நினைத்த david-ற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதை பார்த்தவுடன் அவரை காப்பாற்ற diana நீச்சல் குளத்தில் குதித்து விட்டார்.
எனினும், அவர் நீச்சல் உடை அணிந்திருக்கவில்லை. விருந்திற்காக முழு ஆடை அணிந்து ஷூக்கள் அணிந்திருந்தார். எனவே அவரால் நீச்சல் அடிக்க முடியாமல் மூச்சு திணறி இறந்துவிட்டார். அதற்குள் david-ம் உயிரிழந்தார். இந்நிலையில், david-ற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட காரணம் என்ன? என்பது தொடர்பில் நீச்சல் குளத்தில் ஆய்வு நடக்கிறது.