Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் கனமழை…. ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு…. கண்காணித்து வரும் நீர்வளத்துறை அதிகாரிகள்….!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1500 கனஅடி நீரும் பாதுகாப்பு கருதி திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துள்ளது. மேலும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் இதன் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Categories

Tech |