Categories
லைப் ஸ்டைல்

எண்ணை தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது… தூங்கினால் உடலுக்கு கேட்டது….!!

எண்ணை தேய்த்து குளிப்பவர்களுக்கு சில அறிவுரைகள்

 

  • உடலில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதாக இருந்தால் சூரிய உதயத்திற்குப் பிறகு குளிப்பது சிறந்தது. காரணம் சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டி சத்து நமக்கு கிடைக்கப் பெறுவதால் உடலில் எண்ணெய் தேய்த்து விட்டு சுமார் ஒரு மணிநேரம் வெயிலில் நின்றால் உடலுக்கு நன்மையை கொடுக்கும். அதிகாலையில் தலைக்கு எண்ணை வைத்துக் குளிப்பது கூடாத விஷயம்.

 

  • உடம்பில் எண்ணை தேய்த்து குளிப்பவர்கள் நிச்சயம்சூடான தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி அப்போது சோப்பு, ஷாம்பு உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும். தலைக்கு சீயக்காய்  போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

  • அம்மாவாசை, பௌர்ணமி, பிறந்த நட்சத்திரம், பிறந்த நாள், மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, விரத நாட்கள் இது போன்ற நாட்களில் நிச்சயம் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கக்கூடாது. காரணம் இந்த நாட்களில் குளிர்ச்சியான நாட்களாகவே இருக்கும்.

 

  • பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். ஆண்கள் புதன் மற்றும் சனி எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

 

  • தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் குளிர்ச்சி நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

  • தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் சற்று சோர்வடையும். அது குறித்து கவலை கொள்ளாமல் வீட்டில் சிறிய வேலைகளை அல்லது நடைப்பயிற்சி செய்தால் சோர்வு நீங்கிவிடும்.

 

  • தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பவர்கள் மதியம் உறங்குவதை தவிர்க்க வேண்டும். காரணம் உறங்கினால் கண்கள் வழியே உஷ்ணம் வெளியாகி சூடு உடலிலேயே தங்கி விடும். அதனால் தலைவலி, வயிற்றுவலி, கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

  • தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதினால் மூட்டுவலி, உடல்வலி, உடல் உஷ்ணம், கண் எரிச்சல் தைராய்டு பிரச்சினைகள், எலும்பு தேய்மானம் போன்றவைகள் தீரும்.

Categories

Tech |