Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அட!… என்ன‌‌ ஓர் அதிசியம்…. கன்று‌ ஈனாமல் 24 மணி நேரமும் பால் கறக்கும் பசுமாடு…. பக்தியோடு வணங்கும் கிராம மக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே நந்தவன பட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெருமாள் மற்றும் மயில் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகள் வளர்க்கும் ஒரு பசு மாடு கன்று இல்லாமல் 24 மணி நேரமும் பால் கறக்கிறது. இந்த மாட்டிற்கு சினை ஊசி கூட போடவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் ஒரு கன்று இல்லாமல் சினை ஊசி போடாமல் ஒரு மாடு 24 மணி நேரமும் பால் கறப்பது மிகவும் அதிசயமாக இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் வந்து மாட்டை வணங்கி செல்வதோடு அதை தெய்வீக பசுமாடு என்றும் கூறுகிறார்களாம். மேலும் அந்த மாடு வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தங்களுக்கு நல்லதே நடப்பதாக மாட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். அதோடு தினமும் மாட்டின் காலில் விழுந்து வணங்கினால் நல்லது நடக்கும் என்று மக்கள் நம்புவதால் தினந்தோறும் வந்து மாட்டின் காலில் விழுந்து வணங்கி செல்கிறார்களாம்.

Categories

Tech |