மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கல்கத்தாவில் திருமணத்தின் போது ஒரு மணமகன் கையில் லேப்டாப் வைத்து வேலை பார்க்கும் வீடியோ மற்றும் புகைப்படமானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா காலகட்டத்தின் போது வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அறிமுகமான நிலையில் தற்போது திருமணத்தின் போது கூட ஒருவர் கையில் லேப்டாப் வைத்து வேலை செய்வது பலரது மத்தியிலும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான நாளான்று திருமணத்தின் போது கூட வேலை வாங்குவது சரியானது கிடையாது என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் ஐயர் சாங்கிய சடங்குகள் செய்து கொண்டிருக்கும் போதும் மணமகன் மிகவும் சின்சியராக லேப்டாப்பில் வேலை பார்ப்பதை பார்த்த பலரும் கலாய்க்கவும் செய்கிறார்கள். அதோடு சிலர் அந்த மணமகனின் நிலைமையை பார்த்து பரிதாபமும் படுகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படமானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram