Categories
இந்திய சினிமா சினிமா

அட!… என்ன‌ மனசுயா….. நள்ளிரவு வரை காத்திருந்து பிரியாணி பரிமாறிய பிரபாஸ்…. நெகிழ்ந்து போன சூர்யா….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் தன்னுடைய சக நடிகர்களுக்கு எப்படி விருந்தோம்பல் செய்வார் என்பதை பல பிரபலங்களும் கூறியுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸ் தனக்கு விருந்தோம்பல் செய்தது குறித்து கூறியுள்ளார். அதாவது நடிகர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே மற்றும் சூர்யா 42 திரைப்படங்களின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் அருகருகே நடைபெற்று வருகிறது.

அந்த சமயத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்த பிரபாஸ் அன்றைய தினத்தில் இரவு சாப்பிடுவதற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் நடிகர் சூர்யாவின் படப்பிடிப்பு 6 மணிக்கு துவங்க வேண்டிய இடத்தில் தாமதமாக தொடங்கியதால் இரவு 11 மணிக்கு மேல் சூட்டிங் முடிய ஆகிவிட்டது. இதனால் சூர்யா விருந்துக்கு செல்ல வேண்டாம் என்று நினைத்ததோடு ஹோட்டலில் தான் சாப்பிட போகிறோம் இன்னொரு நாள் அவருடன் சேர்ந்து சாப்பிட்டு விடலாம் என்று நினைத்துள்ளார். அதன் பிறகு இந்த தகவலை நடிகர் பிரபாஸை நேரில் சந்தித்து சொல்வதற்காக சூர்யா ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

அப்போது நடிகர் பிரபாஸ் சூர்யாவுக்காக சாப்பிடாமல் காத்திருந்ததோடு தன்னுடைய தாயார் வீட்டில் சமைத்த பிரியாணியை அவருக்காக கொண்டு வந்துள்ளார். அதன்பின் நடிகர் பிரபாஸ் சூர்யாவுக்கு பரிமாறி விட்டு தானும் சாப்பிட்டு உள்ளார். இந்நிலையில் அது போன்ற ஒரு பிரியாணியை நான் சாப்பிட்டதே கிடையாது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது என்று சூர்யா கூறியுள்ளார். மேலும் நடிகர் சூர்யா கூறியது தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |