விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில் சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், சமீபத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் அசல் பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்ந்ததால் நெட்டிசன்கள் பலரும் இணையதளத்தில் கொந்தளித்தனர். அசல் குயின்சியை எப்போதும் பின் தொடர்ந்த நிலையில் அவர் செட்டாகவில்லை என நினைத்து நிவான்சியிடம் நெருங்கி பழக ஆரம்பித்தார்.
இந்நிலையில் அசல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு தன்னுடைய நண்பர்களிடம் எதற்காக நான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன் என்று கேட்டுள்ளார். அதற்கு அவரின் நண்பர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் இணையதளத்தில் உன்னை பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது என்று கூறியுள்ளனர். இதனால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அசல் ஒரு வீடியோ வெளியிட்டார். அவர் நான் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க் அனைத்தையும் நல்ல முறையில் செய்தேன். நான் பெண்களிடம் சகஜமான முறையில் பழகியது உங்கள் பார்வைக்கு தப்பாக தெரிந்துள்ளது. இன்னும் கொஞ்ச நாள் என்னை பிக் பாஸ் வீட்டில் அனுமதித்து இருந்தால் கண்டிப்பாக என்னுடைய திறமையை நான் காண்பித்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் அசல் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு காரணம் அரசியல் தான் என்று கூறப்படுகிறது. அதாவது கமல்ஹாசன் அரசியல் கட்சியில் இருப்பதால், அவருக்கு அசல் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதால் மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் அசலை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக ஏழைகள் முன்னேற்றக் கழகத் தலைவர் அர்ஜுனன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் காரணம் எதுவாக இருந்தாலும் அசல் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது பார்வையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிதான்.