Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! வேலைக்கு வராமல் சம்பளத்துக்கு ஆள் வைத்த ஆசிரியை…. கமிஷன் பெற்ற ஹெட்மாஸ்டர்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் தற்காலிக ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி விட்டு அரசின் சம்பளத்தை பெறுவதாக அவ்வப்போது சில செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது 2 ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் அரசின் சம்பளத்தை பெற்றதாக புகார் எழுந்துள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் கடந்த 1 1/2 வருடங்களாக பள்ளிக்கு வராமல் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பள்ளிக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுள்ளார்.

இவர் தனக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர் ஒருவரை வேலையில் அமர்த்தியுள்ளார். இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரும் உடந்தை. இந்நிலையில் அரசு பள்ளியில் பணிபுரியும் மற்றொரு ஆசிரியரும் 2 வாரங்கள் விடுப்பு எடுத்துவிட்டு வேலைக்கு வந்தது போல் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுள்ளார். இப்படி வேலைக்கு வராமல் இருக்கும் ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியர் கமிஷன் பெற்றுக்கொண்டு அரசை ஏமாற்றி வந்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்ததால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் ஒருவர் தான் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு பேசிய ஒரு ஆடியோவும் தற்போது வைரல் ஆகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |