Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!… கர்ப்பமாக இருக்கும் நடிகை ஆலியாவுக்கு இப்படி ஒரு வியாதியா….? பயத்தில் தூங்க கூட முடியலையாம்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட். இவர் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்தது. ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகை ஆலியா பட் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு சிறு வயது முதலே இருட்டு என்றால் மிகவும் பயம். இதை மருத்துவர்கள் நிக்டோபோபியா என்று கூறுகிறார்கள்.

நான் சிறுமியாக இருக்கும்போது என்னுடைய அக்கா ஒரு முறை என்னை இருட்டு அறையில் வைத்து அடைத்து விட்டார். ஆனால் என்னை அறையில் வைத்து அடைத்ததை என்னுடைய அக்கா மறந்து விட்டதால் நான் நீண்ட நேரமாக இருட்டு அறைக்குள் இருந்தேன். இதனால் நான் அதிக அளவில் பயந்து அழுது புலம்பி விரைத்து போய்விட்டேன். நீண்ட நேரத்திற்கு பிறகு தான் என்னுடைய அக்கா வந்து கதவை திறந்தார். இதனால்தான் எனக்கு இருட்டு என்றாலே மிகவும் பயமாக இருக்கிறது. என்னால் இரவு நேரத்தில் லைட் இல்லாமல் தூங்கவே முடியாது. ஒருவேளை லைட்டை ஆஃப் பண்ணினால் எனக்கு தூக்கமே வராது.

இருப்பினும் நான் எனக்கு இருக்கும் பயத்திலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்வேன். நான் லைட்டை ஆஃப் பண்ணினால் கூட ஜன்னலை மட்டும் திறந்து வைத்திருப்பேன். என்னால் அந்த பயத்திலிருந்து வெளிவர முடியவில்லை. இதேபோன்று எனக்கு தோல்வி என்றாலும் பயம் தான். இதனால்தான் நான் அதிகமாக உழைக்கிறேன். எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாகவும் ஒரு முறைக்கு பலமுறை நன்கு யோசிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் கர்ப்பிணியாக இருக்கும் ஆலியா பட்டுக்கு இப்படி ஒரு பிரச்சனையா என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Categories

Tech |