Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! இவரும் இப்படி சொல்லிட்டாரே….. அப்ப உண்மையாவே அது நடக்குமா…..? டிடிவி தினகரனின் பரபரப்பு பேட்டி…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியினர் வார்த்தை ஜாலம் செய்து தமிழை வைத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர். கடந்த 10 வருடங்களாக அம்மா ஜெயலலிதாவால் தான் அதிமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் திருவிளையாடலால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகு அவர்தான் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார்.

கடந்த 1989-ம் ஆண்டு எம்ஜிஆர் இறந்த பிறகு தான் திமுக ஆட்சியில் அமர்ந்தது. கடந்த 1996-ம் ஆண்டு அம்மா ஜெயலலிதா மீது பொய் பிரச்சாரம் செய்து அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. முதல்வர் ஸ்டாலின் அவருடைய அப்பா பாணியில் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்து விட்டார். தற்போது முதல்வர் ஸ்டாலினின் சாயம் தமிழக மக்களிடையே வெளுத்துக் கொண்டிருக்கிறது. எதற்காக திமுக கட்சிக்கு வாக்களித்தோம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்.

திமுக குடும்பத்தின் அடாவடி நடவடிக்கைகள், அமைச்சர்களின் ஆணவ பேச்சு போன்றவைகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இனிவரும் காலத்தில் மக்கள் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள். இனிவரும் காலத்தில் கண்டிப்பாக திமுகவால் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியாது. என்ஐஏ சோதனையை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து தமிழ்நாட்டிலும் சட்டமன்ற தேர்தல் வரலாம் என்று நினைக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தான்‌. வருகிற தேர்தலில் நாங்கள் கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம். மேலும் இந்தியாவின் பிரதமராக மோடியை தேர்ந்தெடுப்பதில் நாங்கள் அணிலை போன்று செயல்படுவோம் என்ற.

Categories

Tech |